ஆட்டுக்கால் பாயா(சால்னா) { Attukaal paayaa In Tamil}
சுவையான சத்தான ஆட்டுக்கால் பாயா(சால்னா) செய்வதற்கான செய்முறை குறிப்பு.
தேவையான பொருட்கள்
- ஆட்டுக்கால் – 8
- பெரிய வெங்காயம் – 2
- தக்காளி – 2 (பெரியது)
- இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
- கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி
- மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
- சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
- மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி
- எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
- மல்லித்தழை , கறிவேப்பிலை – சிறிது
- பச்சை மிளகாய் – 2
- தேங்காய் துருவல் – 4 மேசைக்கரண்டி
- முந்திரி பருப்பு – 8
- மைதா – 2 மேசைக்கரண்டி
- உப்பு – தேவைக்கு
- வெங்காயம், தக்காளி, மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- தேங்காய் மற்றும் முந்திரிப்பருப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- ஆட்டுக்காலை சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.
- சுத்தம் செய்த ஆட்டுக்காலை மைதாமாவு, சிறிது உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
- ஆட்டுக்காலை கழுவி குக்கரில் போட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, மல்லித்தழை, மசாலாத்தூள் வகைகள், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- கொதி வந்த பின்பு குக்கரை மூடி 2-3 விசில் வந்த பின்பு அடுப்பை குறைத்து வைக்கவும். இளங்காலாக இருந்தால் அரைமணி நேரம், சிறிது வழுவாக இருந்தால் ஒரு மணி நேரம் வைத்து வேக வைக்கவும்
- கால் வெந்தவுடன் அரைத்த தேங்காய், முந்திரிபருப்பு விழுதை சேர்க்கவும்.
- அடுப்பை குறைந்த சூட்டில் வைத்து கால் மணி நேரம் கொதிக்க விடவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது வெங்காயம், கருவேப்பிலையை இளஞ்சிவப்பாக வதக்கி சால்னாவில் சேர்க்கவும்.
- சுவையான சத்தான ஆட்டுக்கால் சால்னா ரெடி.
- ஆட்டுக்கால் பாயா(சால்னா) பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம், ஆப்பம், தோசை, சாதம் ஆகியவற்றுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.
REFER : www.jcwebstar.com
No comments:
Post a Comment