முருங்கைக்காய் மிளகுக் கோழி{Murungaikai Milagu Kozhi In Tamil
சுவையான முருங்கைக்காய் மிளகுக் கோழி செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. இந்த குறிப்பு திரு.தாமோதரன்(செப்.தாமு) அவர்களின் சமையல் குறிப்பைத் தழுவியது.
தேவையான பொருட்கள்
- சிக்கன் – 1/4 கிலோ
- முருங்கைக்காய் – 2
- பொடியாக நறுக்கிய வெங்காயம் – 250௦ கிராம்
- இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- சீரகம் – 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 6
- பச்சை மிளகாய் – 2
- மிளகுத்தூள் – 4 தேக்கரண்டி
- மல்லித்தழை – 1/2 கட்டு
- கறிவேப்பிலை – 2 கொத்து
- எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- காய்ந்த மிளகாயை விதை நீக்கி சேர்க்கவும். இதனுடன் முருங்கைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கலாம்.
- இதனுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
- சிக்கன், தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்துவேக விடவும்.
- பொடி செய்து வைத்துள்ள வெள்ளை மிளகையோ அல்லது கருப்பு மிளகையோ காரம் பார்த்து தகுந்தாற்போல் சேர்க்கவும்.
- நன்கு சுண்டி வரும் வரை வேக விடவும். சிறிது மசாலா கலவை இருக்குமாறு பார்த்து இறக்கவும்.
- மல்லித்தழை தூவி பரிமாறவும்.
குறிப்பு
விருப்பமெனில் ஒரு தக்காளியை ஜூஸ் போல் பிழிந்து பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment