செட்டிநாடு கோழி ரசம் (சிக்கன் சூப்) Chikken Soop In Tamil
செட்டிநாடு முறையில் சுவையான கோழி ரசம் (சிக்கன் சூப்) செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.
தேவையான பொருட்கள்
- கோழி(எலும்புடன்) – 1/2 கிலோ
- சின்ன வெங்காயம் – 10
- சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
- மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 1
- தக்காளி – 1
- இஞ்சி – 1 துண்டு
- பூண்டு – 5 பல்
- பட்டை, லவங்கம் – தலா 1
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
- உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
- இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய்ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
- வதக்கிய கலவையை குக்கரில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, 6 விசில் வரும் வரை வேக விடவும்.
- பின்பு சூப்பில் எலுமிச்சைசாறு பிழிந்து பரிமாறவும்.
Golden Gate Hotel & Casino - MapyRO
ReplyDeleteFind Golden 창원 출장샵 Gate 충주 출장마사지 Hotel & Casino, Stateline (mapyro) with 여수 출장샵 real people, places 거제 출장마사지 to stay, reviews, 광양 출장샵 location maps, driving directions,