பாடல் தேடுக

நீலகிரி சிக்கன் குருமா Nilagiry Chikken Kurumaa

சுவையான நீலகிரி சிக்கன் குருமா செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.
தேவையான பொருட்கள்
  • சிக்கன் – 1 கிலோ
  • பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு விழுது  – 1 1/2 தேக்கரண்டி
  • தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு – 2 மேசைக்கரண்டி
  • கறிவேப்பிலை – சிறிது
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
அரைப்பதற்கு
  • சீரகம் – 1தேக்கரண்டி
  • சோம்பு – 1 தேக்கரண்டி
  • கசகசா – 1 தேக்கரண்டி
  • பட்டை – 1 இன்ச்
  • ஏலக்காய் – 2
  • துருவிய தேங்காய் – 4 மேசைக்கரண்டி
  • முந்திரி – 6
  • பச்சை மிளகாய் – 3
  • கொத்தமல்லி – 2 மேசைக்கரண்டி (பொடியாக  நறுக்கியது)
  • புதினா – 2  மேசைக்கரண்டி (பொடியாக  நறுக்கியது)
  1. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து  அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின் அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, அத்துடன் முந்திரி, தேங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து  நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்னர் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  4. பின்பு இஞ்சி பூண்டு  விழுது சேர்த்து வதக்கி, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு  சேர்த்து  4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
  5. அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, கிளறி விட வேண்டும்.
  6. பிறகு எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டு  பிரட்டி, தேவையான அளவு  தண்ணீரை ஊற்றி, மூடி வேக வைத்து இறக்க வேண்டும்.
  7. இப்போது சுவையாக நீலகிரி சிக்கன் குருமா தயார். இதனை சாதம், சப்பாத்தி, நாண்,புலாவ், பிரியாணி ஆகியவற்றுடன்  சாப்பிட்டால்  நன்றாக  இருக்கும்.-----------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment