பாடல் தேடுக

மட்டன் கோலா உருண்டை {mattan Koola Urundai }

          மட்டன் கோலா உருண்டை

                  {mattan Koola Urundai }
சுவையான மட்டன் கோலா உருண்டை செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.
தேவையான பொருட்கள்
  • கொத்துக்கறி – 200 கிராம்
  • பெரிய வெங்காயம் – 2
  • தேங்காய்த்துருவல் – 2 மேசைக்கரண்டி
  • முட்டை – 1
  • பச்சை மிளகாய் – 5
  • பொட்டுகடலை – 2 தேக்கரண்டி
  • கசகசா – 2 தேக்கரண்டி
  • சோம்பு – 1 தேக்கரண்டி
  • பட்டை – சிறிது
  • இஞ்சி – சிறு துண்டு
  • பூண்டு – 5 பல்
  • உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு
  1. தேங்காய்த்துருவல், பொட்டுக்கடலை, கசகசா ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  2. வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. குக்கரில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  4. இதனுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
  5. தண்ணீர் வற்றி சுருள வதங்கியதும், அரைத்துக் கொள்ளவும்.
  6. அரைத்து வைத்துள்ள கறியுடன் முட்டையும் உடைத்து ஊற்றி , அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும்.
  7. கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, உருண்டைகளை போட்டு சிவக்க பொறித்து எடுக்கவும்.

No comments:

Post a Comment