நெத்திலி வறுவல் nethili-varuval-in-tamil
செட்டிநாடு முறையில் சுவையான நெத்திலி வறுவல் செய்வதற்கான குறிப்பு. இந்த குறிப்பு திரு.தாமோதரன்(செப்.தாமு) அவர்களின் செட்டிநாடு சமையல் குறிப்பைத் தழுவியது.
தேவையான பொருட்கள்
- தலை, குடல் நீக்கிய நெத்திலி மீன் – 1 /2 கிலோ
- மிளகாய்த்தூள் – 3 தேக்கரண்டி
- தனியாத்தூள் – 4 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
- எலுமிச்சம்பழம் – 2 அல்லது புளி – ஒரு கோலி குண்டளவு
- எண்ணெய் – 4 குழிக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- கருவேப்பிலை – 2 கொத்து
- இஞ்சி,பூண்டு விழுது அல்லது பூண்டு பொடித்தது – 1 தேக்கரண்டி
செய்முறை
- நெத்திலி மீனின் தலை மற்றும் குடல் பாகத்தை நீக்கி, மண் போக நன்கு சுத்தம் செய்ய ஒன்றுக்கு இரண்டு முறை தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்து அலச வேண்டும்.
- பாத்திரத்தில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், அரைத்த பூண்டு, மஞ்சள்தூள், எலுமிச்சம்பழச்சாரு பிழிந்து தேவையான உப்பு சேர்த்து சுத்தம் செய்த நெத்திலியை அதில் சேர்த்து நன்கு பிசறி குறைந்தது 15 நிமிடம் ஊற விடவும்.
- கடாயில் 4 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு, சூடானதும், கறிவேப்பிலையை பொரித்து எடுத்த பிறகு, பிசறி வைத்துள்ள நெத்திலியைப் போட்டு மொறுமொறுவென்று பொரித்துஎடுக்கவும்.
- பொரித்து வைத்துள்ள நெத்திலி மீன்களின் மேல் பொரித்து வைத்துள்ள கறிவேப்பிலையைத் தூவி பரிமாறவும்.
- இஞ்சி பூண்டு விழுதைத் தேவையெனில் பயன்படுத்தலாம் அல்லது பூண்டை மட்டும் அரைத்து பயன்படுத்தலாம்.
REFER : www.jcwebstar.com
No comments:
Post a Comment