செட்டிநாடு மீன் வறுவல் chettinad-fish-fry-in-tamil
செட்டிநாடு செய்முறையில் தயாரிக்கப்படும் இந்த மீன் வறுவல் செய்வதற்கான குறிப்பு திரு.தாமோதரன்(செப்.தாமு) அவர்களின் செட்டிநாடு சமையல் குறிப்பைத் தழுவியது.
தேவையான பொருட்கள்
- மீன் – 1 /2 கிலோ
- மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி
- தனியாத்தூள் – 5 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
- எலுமிச்சம்பழம் – 1
- மிளகு – 2 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 4
- கடுகு – 1 தேக்கரண்டி
- கடலைப்பருப்பு – 3 தேக்கரண்டி
- உளுத்தம்பருப்பு – 3 தேக்கரண்டி
- கருவேப்பிலை – 2 கொத்து
- எண்ணெய் – 1 1 /2 குழிக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- மீனை சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும்.
- மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சம்பழச்சாறைப் பிழிந்து பேஸ்ட் போல செய்து கொண்டு, அதில் மீனை நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். குறைந்தது 1 மணி நேரமாவது ஊற வைக்கவும். இரவு முழுவதும் ஊற வைத்தால் நன்றாக இருக்கும்.
- மிளகு, காய்ந்த மிளகாய், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை வாணலியில் தீயாமல் வறுத்து, ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும்.
- ஊற வைத்துள்ள மீனை இந்த அரைத்து வைத்துள்ள மசாலாவில் இரண்டு புறமும் பிரட்டி எடுத்து அடுப்பில் உள்ள தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பொரித்தெடுக்கவும்.
- அடுப்பின் தணலைக் குறைவாகப் பயன்படுத்தினால் மசாலா நன்கு சேர்ந்து, மொறு மொறு, மீன் வறுவல் கிடைக்கும்.
- இந்த முறையில் தயாரிக்கப்படும் மீன் வறுவல் சாம்பார் சாதம், குருமா, தனியாக சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment