பாடல் தேடுக

சிக்கன் மிளகு வறுவல் chicken-milaku-varuval-in-tamil.


சிக்கன் மிளகு வறுவல் chicken-milaku-varuval-in-tamil
தேவையான பொருட்கள்
  • சிக்கன்  –  1 /2 கிலோ
  • பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது)  – 2
  • தக்காளி (பொடியாக நறுக்கியது) –  2
  • இஞ்சி பூண்டு விழுது  – 2 தேக்கரண்டி
  • மல்லித்தூள்  –  1 மேசைக்கரண்டி
  • மிளகாய்த்தூள்   –  1 மேசைக்கரண்டி
  • மிளகுதூள்  – 2 மேசைக்கரண்டி
  • எலுமிச்சம்பழ சாறு – 1 மேசைக்கரண்டி
தாளிக்க
  • பட்டை – 3 துண்டு
  • கிராம்பு  – 3
  • ஏலக்காய் – 3
  • பிரியாணி இலை  –  1
  • கருவேப்பிலை  – சிறிது
  • சோம்பு  – 1 தேக்கரண்டி
  1. சிக்கனில் 1  மேசைக்கரண்டி மிளகாய்த்தூள், 1  தேக்கரண்டி மஞ்சள்தூள், பாதி இஞ்சி, பூண்டு விழுது, பாதி உப்பு  சேர்த்து 30  நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
  2. கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடு செய்து, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
  3. பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
  4. மீதமுள்ள இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  5. பின் தக்காளி சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும். பின் மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. பின் 1 /4 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு, மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  7. எண்ணெய் பிரிந்து மேலே வரும்போது, சிக்கன் துண்டுகளைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
  8. மீதமுள்ள உப்பு சேர்த்து மூடி போட்டு 8 – 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  9. சிக்கன் வெந்தவுடன் மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, இறக்கவும்.
  10. கடைசியாக எலுமிச்சம்பழ சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.

No comments:

Post a Comment