பாடல் தேடுக

தந்தூரி சிக்கன் tandoori-chicken-in-tamil

தந்தூரி சிக்கன் tandoori-chicken-in-tamil

சுவையான தந்தூரி சிக்கன் செய்வதற்கான எளிய குறிப்பு.
தேவையான பொருட்கள்
  • சிக்கன் தொடைப்பகுதி(chicken drumstic) – 7
  • மிளகாய்த்தூள் – 2  தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் – 1  தேக்கரண்டி
  • தயிர் – 1 /2 கப்
  • எலுமிச்சம்பழசாறு – 2  தேக்கரண்டி
  • இஞ்சி,பூண்டு விழுது – 2  தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி
  • சிகப்பு கலர் பவுடர் – சிறிது
  • உப்பு – தேவையான அளவு
  • வெண்ணெய் – 1  தேக்கரண்டி
அலங்கரிக்க
  • வெங்காய வலயங்கள் – சில
  • நறுக்கிய எல்லுமிசை துண்டுகள் – சில
  • மல்லித்தழை – சிறிது
  1. சிக்கன் தொடைப்பகுதிகளை மேலே கொடுத்துள்ள பொருட்களைப் பயன்படுத்தி 2  மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
  2. பேக்கிங் தட்டை எடுத்து அதன் மேலே அலுமினியம் பாயிளால் சுற்றி விடவும். சீட்டில் மேலே எண்ணெய் தடவி விடவும்.
  3. அவனை 450 டிகிரி வைத்து சூடு செய்யவும்.
  4. ஊற வைத்துள்ள சிக்கனை சீட்டில் வைத்து, தட்டை அவனில் 20  நிமிடங்கள் வைக்கவும்.
  5. 20  நிமிடங்கள் கழித்து அவனை ப்ராயில்க்கு மாற்றி 2  நிமிடங்கள் வைக்கவும்.பின் சிக்கனை திருப்பி வைத்து ப்ராய்லில் மேலும் 2  நிமிடங்கள் வைத்து வெளியே எடுக்கவும்.
  6. சிக்கன் துண்டுகளின் மேலே வெண்ணெய் தடவி விடவும்.
  7. சிக்கன் துண்டுகளை தட்டில் வைத்து அலங்கரிக்க கொடுத்துள்ள பொருட்களைப் பயன்படுத்தி அலங்கரிக்கவும்.
அவன் இல்லாமல் தந்தூரி சிக்கன் செய்யும் முறை
  1. ஒரு அகலமான பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு சூடானதும் அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளைப் போட்டு அதிக தீயில் லேசக பொன்னிறமாகும் வரை வைக்கவும்.
  2. பின் தீயைக் குறைத்து மூடி போட்டு 20  – 30  நிமிடங்கள் அல்லது சிக்கன் வேகும் வரை வைக்கவும். இடையிடயே சிக்கனை திருப்பிப் போட்டுக் கொள்ளவும்.
குறிப்பு
சிக்கன் துண்டுகளை இரவு முழுவதும் ஊற வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.





REFER : http://www.jcwebstar.com

No comments:

Post a Comment