பாடல் தேடுக

நாட்டுக் கோழிக் குழம்பு{Naattu Kozhi Kuzambu In Tamil}

நாட்டுக் கோழிக் குழம்பு{Naattu Kozhi Kuzambu In Tamil}

சுவையான நாட்டுக் கோழிக் குழம்பு செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.
தேவையான பொருட்கள்
  • சிக்கன் – 1/2 கிலோ
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2
  • பொடியாக நறுக்கிய தக்காளி – 3
  • பச்சை மிளகாய் – 2
  • காய்ந்த மிளகாய் – 2
  • பூண்டு – 8
  • இஞ்சி – 50 கிராம்
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி
  • சோம்பு – 1 தேக்கரண்டி
  • பிரிஞ்சி இலை – 1
  • மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
  • தனியாத்தூள் – 2 தேக்கரண்டி
  • தேங்காய் – 1 /2 மூடி
  • கறிவேப்பிலை – 2 கொத்து
  • எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
  1. இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  2. சுத்தம் செய்த சிக்கனை சிறு துண்டுகளாக்கி, கத்தியால் அங்குமிங்குமாகக் கீறி, அதன் மேல் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, 1/2 எலுமிச்சம் பழம் பிழிந்து நன்கு பிசறி தனியாக வைத்துக் கொள்ளவும்.
  3. தேங்காய், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, 1/2 தேக்கரண்டி சோம்பு, சேர்த்து தண்ணீர் விடாமல் மைப்போல் அரைத்துக் கொள்ளவும்.
  4. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும், பிரிஞ்சி இலை, 1/2 தேக்கரண்டி சோம்பு சேர்த்து பொரித்து, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  5. பின் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  6. பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
  7. பிசறி வைத்துள்ள சிக்கனைச் சேர்த்து தண்ணீர் விடாமல் வேக விடவும்.
  8. சிக்கன் முக்கால் பாகம் வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள மசாலாவைக் கலந்து தண்ணீர் தெளித்து தொடர்ந்து வேக விடவும்.
  9. இதனுடன் கறிவேப்பிலை, காரத்திற்கு ஏற்றாற்போல் பச்சை மிளகாய் , உப்பு சேர்த்து
    வேக விடவும்.
  10. மல்லித்தழை தூவி சாதத்துடன் பரிமாறவும்.

No comments:

Post a Comment