பாடல் தேடுக

காரைக்குடி மீன் குருமா karaikudi-fish-kurma In Tamil


காரைக்குடி மீன் குருமா karaikudi-fish-kurma In Tamil
சுவையான காரைக்குடி மீன் குருமா செய்வதற்கான எளிய குறிப்பு.
தேவையான பொருட்கள்
  • வௌவால் மீன் (அ) வஞ்சரனை மீன் (அ) எல்லா வகை மீன்களும் – 1 /2 கிலோ
  • தக்காளி – 150 கிராம்
  • வெங்காயம் – 150 கிராம்
  • சம பங்கு இஞ்சி, பூண்டு விழுது – 1  தேக்கரண்டி
  • தேங்காய் – 1 /2 மூடி
  • பச்சை மிளகாய் – 4
  • சோம்பு – 1  தேக்கரண்டி
  • கசகசா – 1 /2 தேக்கரண்டி (விருப்பமெனில்)
  • மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
  • தனியாத்தூள் – 3  தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
  • பிரிஞ்சி இலை – 2
  • மிளகுத்தூள் – 1  தேக்கரண்டி
  • புளி- கோலி குண்டு அளவு
  • கருவேப்பிலை – 2  கொத்து
  • எண்ணெய் , உப்பு – தேவைக்கேற்ப
  1. மீனை வட்டமாக நறுக்கி, கல் உப்பு சேர்த்த தண்ணீரில் நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
  2. தேங்காய், பச்சை மிளகாய், கசகசா,மிளகு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் பிரிஞ்சி இலை, சோம்பு சேர்த்து பொரித்து, பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்நிறமாக வதக்கவும்.
  4. இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
  5. இப்பொழுது மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் அரிது வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். இதனுடன் 2  பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. குருமா கொதிக்க ஆரம்பித்தவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை ஒவ்வொன்றாக குருமாவில் சேர்த்து வேக விடவும்.
  7. குருமா இறக்குவதற்கு முன்பாக புளிகரைசலை சேர்த்து கொதிக்கவிட்டு, கொதி வந்தவுடன் மல்லித்தழை தூவி பரிமாறவும்.
  8. இட்லி, தோசை, வெள்ளை சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு 
எல்லா வகை மீன்களிலும் இந்த குருமா செய்யலாம்

No comments:

Post a Comment