சிக்கன் சால்னா {Chikken Salna In Tamil}
சுவையான சிக்கன் சால்னா செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.
தேவையான பொருட்கள்
- சிக்கன் எலும்பில்லாதது / மட்டன் – 1/2 கிலோ
- பெரிய வெங்காயம் – 2
- தக்காளி – 1
- கறிவேப்பிலை- 10 இலைகள்
- மல்லித்தழை – 1/4 கட்டு
- பிரியாணி இலை – 1
- பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2
- சீரகம் – 1/4 தேக்கரண்டி
- சோம்பு – 1/4 தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
- எலுமிச்சம்பழச்சாறு – 2 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய்
அரைக்க
- இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
- மிளகு – 1 1/2 தேக்கரண்டி
- சீரகம் – 1 தேக்கரண்டி
- வர கொத்தமல்லி – 2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 2
- துருவிய தேங்காய் – 1/4 கப்
- அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- சிக்கனை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி,1/2 தேக்கரண்டி உப்பு, எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடு செய்து பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
- இதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
- பின் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- இதனுடன் ஊற வைத்துள்ள சிக்கன், தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கறிவேப்பிலை, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்து தனியே வரும் வரை கொதிக்க விடவும். குழம்பு சிறிது தண்ணியாக இருக்க வேண்டும்.
- மல்லித்தழை தூவி இட்லி, தோசை, இடியாப்பம், பிரியாணி அல்லது ரொட்டியுடன் பரிமாறவும்.
No comments:
Post a Comment