பாடல் தேடுக

செட்டிநாடு மட்டன் கறி chettinad-mutton-kari-in-tamil

செட்டிநாடு மட்டன் கறி chettinad-mutton-kari-in-tamil
செட்டிநாடு முறையில் சுவையான மட்டன் கறி செய்வதற்கான எளிய குறிப்பு…
தேவையான பொருட்கள்
  • மட்டன் – 1 கிலோ
  • சின்ன வெங்காயம் – 100 கிராம்
  • பூண்டு – 5 -8 பல்
  • இஞ்சி – 1 துண்டு
  • <
    li> பட்டை – 2
  • கிராம்பு – 2
  • சீரகம் – 1 /2 தேக்கரண்டி
  • சோம்பு – 1 /2 தேக்கரண்டி
  • மிளகு – 1 /4 தேக்கரண்டி
  • மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
  • கடுகு – 1 /2 தேக்கரண்டி
  • பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி – 2 (வெட்டியது)
  1. மட்டனை கழுவி, நடுத்தரமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு,சீரகம், சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, மல்லி, மிளகாய் தூள் அனைத்தையும் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  3. அரைத்த மசாலாவை மட்டன் துண்டுகள் மீது தடவி, 30 நிமிடங்கள் வைக்கவும்.
  4. குக்கரில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.
  5. மசாலா தடவி வைத்துள்ள மட்டன் துண்டுகளைச் சேர்த்து 4 விசில் வரும் வரை வேக விடவும்.
  6. கடையில் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பின் கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் தக்காளி சேர்த்து நன்கு மாசியும் வரை வதக்கவும்.
  7. வேக வைத்துள்ள மட்டன் துண்டுகளைச் சேர்த்து , எண்ணெய் பிரியும் வதக்கி இறக்கவும்.

No comments:

Post a Comment